தங்கம் அதிரடி சரிவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!

 
தங்கம்

சர்வதேச சந்தையில்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு   அடிப்படையில் தங்கத்தின்  விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 5ம் தேதி தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அதன்படி மார்ச் 5ம் தேதி தங்க வரலாற்றில் முதன் முறையாக சவரன் விலை ரூ48000ஐ தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் ,இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.   
 கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை . இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ40 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

gold jewel actress sneha

இதனால் முதலீட்டாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.  அந்த வகையில்  சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில்  மாற்றமில்லை இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6110க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ48880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.79.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ79500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சீன, ரஷ்யா  போன்ற  நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றன. இதனால்  தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்னும்  சில நாட்களில் தங்கத்தின் விலை  சவரன் ரூ.50,000க்கும் அதிகரிக்கும் என்கின்றனர்.  இந்தியாவை பொறுத்தவரை  குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கத்தின் விற்பனை சக்கை போடு போடுவது வழக்கமான ஒன்று தான். திருமணம், சுபநிகழ்வுகள், குடும்ப விழாக்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என அனைத்து விசேஷங்களுக்கும் தங்கத்தில் முதலீடு  என்பது ஒரு வழக்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதும் வாடிக்கை தான்.  அதே நேரத்தில்  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருவதால்தான் தொடர்ந்து தங்கத்தின் விலை  அதிகரித்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web