தொடர் உச்சத்தில் தங்கம்... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்து நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை , முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ20 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 7160க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ103க்கும் , ஒரு கிலோ வெள்ளி விலை ரூ1,03,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
