தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை ... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்
 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து    ஏற்ற-இறக்கத்துடன்  காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலையில் வேறுபாடு நிலவி வருகிறது.  இந்த திடீர்  விலை உயர்வு திருமணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளுக்காக திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை எப்போது குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,580க்கும், ஒரு சவரன் ரூ.92,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி  ஒரு கிராம்  ஆபரணத் தங்கம் ரூ.11,825க்கும், சவரன் ரூ.94,600க்கும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்  தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக ரூ.94,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது.  

தங்கம்
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் ரூ.35 உயர்ந்து, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,860க்கும், ஒரு சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளி ரூ.206க்கும், ஒரு கிலோ ரூ.2,06,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?