தொடர் சரிவில் தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களில் விலை மெல்ல சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட பின்னர், விலை மாறுதலின்றி ஏற்ற-இறக்கத்துடன் நிலைத்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,350-க்கும், ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையாக இருந்தது. அதன்பின், நேற்று கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கும், சவரன் ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி தங்க விலை மேலும் சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,180க்கும், ஒரு சவரன் ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.163க்கும், ஒரு கிலோ ரூ.1,63,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்களிடையே நிலவுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
