இன்று அரசு விடுமுறை அறிவிப்பு... அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று அக்டோபர் 8ம் தேதி டெல்லியில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மகரிஷி வால்மீகி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், நினைவுக் கூட்டங்களும் நடைபெற இருப்பதாகவும், இதில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிகவி என புகழப்படும் மகரிஷி வால்மீகி, வெறும் கவிஞர் மட்டுமல்ல, இந்திய இலக்கணத்தின் முன்னோடியாகவும், ராமயணத்தை எழுதியவருமாக அறியப்படுபவர். இவர், சமத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்தை வளர்த்ததிலும் பங்காற்றியவர் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸ்

அவரது சிந்தனைகள், நமது நாட்டு மக்களை தொடர்ந்து சமத்துவம், மரியாதை, ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதற்கு வழி வகுத்ததாகவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.  தலித் சமூகத்தினரின் மேம்பாடு, கல்வி, சம வாய்ப்புகள் மற்றும் சோஷலிச நீதியை உறுதி செய்வதில் டெல்லி அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் கூறியிருக்கிறார்.

டெல்லி மெட்ரோ ரயில்

மகரிஷி வால்மீகியின் போதனைகள் சமூகத்தில் நீதி மற்றும் நல்லிணக்க உணர்வை தொடர்ந்து வலுப்படுத்துகின்றன எனக் கூறியுள்ளார். இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், சமூக நலத்துறையின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வில் மகரிஷி வால்மீகியின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் போதனைகள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெறும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?