அன்னை மரியாவின் பிறந்தநாள் மகிமைகள் !!

 
அன்னை மரியா

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று பாடுகிறாள் தமிழ்க் கவிஞன். 
உன்தாய் வயிற்றில்  உருவாகும் முன்பே உன்னை நான் அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன் என    கருவிலேயே ஒவ்வொரு குழந்தையையும் திரு நிலைப்படுத்தி அருளுக்குரிய குழந்தையாக ஆக்குகிறார்.   அன்னை மரியாள் கருவாகி உருவான போதே இறைவன் அவருக்குத் தனது அருளை நிறைவாக வழங்கின.  அன்னை மரியாள்  வாழ்வின் தொடக்கத்தில் பெற்ற அருளை நிறைவாக்கி வாழ்ந்தார்

இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பெருவிழா!

அன்னை மரியாளின் பிறப்பே ஒரு மிகப் பெரிய சிறப்பு. உலக மீட்பரை ஈன்றெடுப்பதற்கென்றே கடவுளால் அன்னை மரியாள் படைக்கப்பட்டாள். அன்னை மரியாளின் பிறப்பு ஒரு அற்புதமான ஒன்று. தாயின் அன்பையும் அரவணைப்பையும் ஆறுதலையும், அக்கறையையும், அர்ப்பணத்தையும், பரிந்து பேசுதலையும், பணிவிடை புரிவதையும் நிறைவு செய்வதையும் அன்னையின் பிறப்பு விழா நமக்கு உணர்த்துகிறது. இன்று வேளாங்கண்ணியில் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ‘மரியா இறைவனின் தாய்’ அவர் மனித குலத்தின் மாணிக்கம்.  


அன்னை மரியாளின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு வருடமும்  செப்டெம்பர் 8 ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது .  ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 8 ம் தேதி ஒரு துறவி இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்து ஆச்சரியப்படுவாராம். ஆனால் அந்த இசை எங்கிருந்து வருகிறது எனத்  தெரியாமல் இருந்தார். இதற்கான காரணத்தை வெளிப்படுத்தும்படி  பல ஆண்டுகள் கடவுளிடம்  வேண்டினார்.  ஒரு வருடத்தில்  அதே செப்டம்பர் 8 ம் தேதி அவருக்கு அதை  வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.  அந்த நாளில் அன்னைக்கு விண்ணகத்தில் வான தூதர்கள் பிறந்த நாள் விழா எடுத்து அன்னையைப் புகழ்ந்து பாடுகின்ற இசையைத்தான் ஒவ்வொரு வருடமும் கேட்டதாகவும் சொல்லுகின்றார். நாமும் நமது அன்னைக்கு இந்த உலகத்தில் விழா எடுக்க வேண்டும் என திருத்தந்தையிடம் சென்று சொன்னார்.

 

அப்பொழுது திருத்தந்தையாக இருந்த 14ம் ஆசீர்வாதப்பர் உலகத் திருச்சபை அன்னையின் பிறப்பு விழாவினைச் செப்டெம்பர் 8 ம் தேதி  கொண்டாட அறிவித்தார். வழக்கமாக மற்ற   புனிதர்களின் திருவிழா   அவர் இறந்து விண்ணகத்தில் பிறந்த அந்த நாளையே   திருச்சபை கொண்டாடுகிறது. ஆனால் திருச்சபையில்  இயேசு, மரியாள் திரு முழுக்கு யோவான் என 3 பேருக்கு மட்டும் அவர்களுடைய பிறப்பு விழாவை கொண்டாடுகிறது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

திருச்சபையின் தந்தையர்கள் சிலர் அன்னை மரியாள் எருசலேமில் பிறந்தார் என்று கூறுகின்றனர். புனித ஜான் தமாசின் மரியாள் நாசரேத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.
அங்கே 15 ஆண்டுகள் கழித்து அன்னைக்கு கபிரியேல் அதி தூதர் வாழ்த்து செய்தி சொல்லி வார்த்தையான இறைவனைக் கருவுற்றதும் இங்கேதான் எனக் கூறுகிறார். அன்னை மரியாளின் பெற்றோர்கள் நடுத்தரக் குடும்பத்தினர்.  அவர்கள் தாவீதின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . மீட்பர் தாவீதின் குலத்தில் பிறப்பார் என முன் அறிவிக்கப்பட்டு தூய கன்னி மரியாளின் பிறப்பு விழாவிற்கும் எருசலேமில் உள்ள புனித அன்னாள் பேராலயத்திற்கும் தெரிவிக்கப்படுகிறது.  புனிதர்கள் சுவக்கீன் அன்னாள் இருவரும் இந்த  ஆலயத்தின் வடக்குப் பகுதியில் வாழ்ந்ததாக மரபு கூறுகின்றது. இது உண்மை தான் என  தொல் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆசிய நாடுகள் அனைத்தும் 6 ம் நூற்றாண்டிலிருந்து இந்தத் திரு விழாவைக் கொண்டாடி வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web