இன்று சாம்பியன்ஷிப் இறுதி போட்டி... 20 வருஷ காயம்... பழிதீர்த்து கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?

 
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

இருபது வருடங்களுக்குப் பிறகு இறுதி போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றும்  முனைப்பில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இன்று நடைபெறுகிற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இரண்டு  அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முண்ணனியில் உள்ளது. , இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால்  இந்தியா ஐசிசி நடத்தும் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா

அதே போல்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.  இதன் மூலம் 20 வருடங்களுக்கு பிறகு  ஐசிசி நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2003ல் நடந்த ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. தற்போது நடைபெற உள்ள உலக டெஸ்ட் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா

ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைபட்டால், அந்த நாளில் ஆட்டம் தொடரும். 2021ம் ஆண்டு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தும் போது இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. தற்போது கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய அளவில் ரன் குவிக்காமல் திணறி வந்த விராட் கோஹ்லி சதம் அடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web