இன்று கடைசி தேதி... மிஸ் பண்ணாதீங்க... இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!
மறந்துடாதீங்க. இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட விவரங்கள்
தலைமை மேலாளர் (Chief Manager) – 41 இடங்கள்
மூத்த மேலாளர் (Senior Manager) – 70 இடங்கள்
மேலாளர் (Manager) – 60 இடங்கள்
மாற்றுத்திறனாளிகள் (PwBD) – 5 இடங்கள்

வயது வரம்பு (01.09.2025 அடிப்படையில்:
தலைமை மேலாளர் – 28–36 வயது
மூத்த மேலாளர் – 25–33 வயது
மேலாளர் – 23–31 வயது
கல்வித் தகுதி:
IT துறை: B.E./B.Tech. அல்லது தொடர்புடைய முதுகலைப் பட்டம்
Credit துறை: CA + 2 வருட MBA/PG Diploma
Risk Management: CA/CFA அல்லது கணிதம், நிதி, பொருளாதாரம், புள்ளியியல் துறையில் பட்டம்/முதுகலை
Company Secretary / Accounts / Investor Service Cell – ICSI / ICAI / MBA

சம்பள விவரம்:
மேலாளர் – ₹64,820 – ₹93,960
மூத்த மேலாளர் – ₹85,920 – ₹1,05,280
தலைமை மேலாளர் – ₹1,02,300 – ₹1,20,940
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு + நேர்காணல் (விருப்பத்தேர்வு)
எழுத்துத் தேர்வில் 160 கேள்விகள், மதிப்பெண்கள் 220, நெகட்டிவ் மார்க் உண்டு
தேர்வானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு – ₹1000
SC/ST/PwBD – ₹175
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்: https://indianbank.bank.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 13
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
