இன்று திருச்செந்தூர் முருகனுக்கு திருக்கல்யாணம்!

 
திருச்செந்தூர்

 

திருச்செந்தூர் திருக்கோயிலில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சூரன் சம்ஹாரத்தின் பின்னர், இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ள திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் ஆன்மிக சூழ்நிலை நிலவுகிறது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவிலுள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு, தெற்கு ரத வீதி - மேலரத வீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்செந்தூர்

நள்ளிரவு நடைபெறும் திருக்கல்யாண ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ஆர். அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு உள்ளிட்ட அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் இணைந்து தீவிரமாக செய்து வருகின்றனர். பக்தர்கள் திரளாக திருச்செந்தூரில் திரண்டிருப்பதால்  பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!