இன்று முதல் நாகை , இலங்கை இடையே தினசரி பயணிகள் கப்பல்!!

 
கப்பல்

இன்று அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு  பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி மூலம்   பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  கலந்து கொண்டு  கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.பிரதமர் மோடி காணொலி மூலம் சிங்களம், தமிழில் வணக்கம் சொல்லி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.  ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.


 "இந்தியா - இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்நிலையில்  இலங்கை காங்கேகசன்துரை - இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல். இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்" என்று கூறினார். இந்தியா - இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக கூறியுள்ளார்  இதற்கான கட்டணம் ஜிஎஸ்டியுடன் சேர்ட்து ரூ7670.  தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால்  இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இன்று  இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.  

நாகப்பட்டினத்தில்  இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்லலாம்.  தினமும்  காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்தை சென்றடையும்.    அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கப்பல்

இந்த  சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள்கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் குளுகுளு ஏசிவசதியுடன் கட்டமைக்கப்பட்டு உள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சிகள்,  தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்   நாகை-இலங்கை இடையே ஏற்கனவே 2 முறை    கப்பல் போக்குவரத்து  புறப்படும் நாள் மாற்றி அமைக்கப்பட்டது.  தற்போது இந்தக் கப்பல் சேவை மீண்டும் அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  முதலில்  அக்டோபர் 10 அடுத்து அக்டோபர் 12 என மாற்றியமைக்கப்பட்ட நிலையில்  மீண்டும் அக்டோபர் 14 என்பதில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ மத்திய அமைச்சர்கள் கூடுதலாக  தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த தேதி மாற்றம் . பயணிகள் மன்னிக்கவும்” என கப்பல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web