இன்று புதன் பிரதோஷம்... பொன், பொருள் சேர இப்படி வழிபாடு செய்து பாருங்க!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

தை மாதம் அத்தனை சிறப்பு என்றால், தை மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினம் அதிலும், புதன்கிழமையன்று சேர்ந்து வருகின்ற பிரதோஷம் கூடுதல் சிறப்பு. இந்த புதபிரதோஷத்தை மிஸ் பண்ணாதீங்க. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிக்கு பிறகு 13ம் நாள் திரையோதசி திதி வருவது வழக்கம். இந்நாளில் தான் பிரதோஷம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இத்தனை சிறப்பு பெற்ற இன்று பிப்ரவரி 7ம் தேதி புதன் கிழமை தை மாதத்தின் பிரதோஷம் வாய்த்திருக்கிறது. இன்றைய தினம் பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், இதுவரை செய்த அனைத்து  பாவங்களும்  தொலைந்து புண்ணியங்கள் பெருகும்  என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

தை மாதம் கொண்டாட்டங்களுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்துமே நினைத்து பார்க்க இயலாத பலன்களை தரவல்லவை. தை மாதத்தில் மனமுருகி நாம் செய்யும் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கவல்லவை. பிரதோஷ நாட்களில் மாலை நேரங்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும்  சிறப்பாக நடத்தப்படும். மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள  இந்த பிரதோஷ  நேரத்தில்தான் நந்தியம் பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு  சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும்.  

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இன்றைய தினம் விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லலாம். இயன்ற அளவு அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். ஆலயத்தின் ஓரத்தில் அமர்ந்து சிவசிந்தனையுடன் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.  

நமசிவாய என்ற ஐந்தெழுத்து  மந்திரத்தைச் சொல்லி சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம். அதன் பிறகு இயன்றவர்களுக்கு உணவளித்த பின் விரதம் முடிக்கலாம். இதனை செய்ய மனக்குழப்பங்களை போக்கி  சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தருவார் எம்பெருமான். பிரதோஷ நாளில் சிவதரிசனம் செய்வோம். சிந்தையை தெளிவாக்குவோம். ஓம் நமசிவாய!

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web