இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மழைக்காலம் தொடங்கும் முன்னரே மழைக்கால நோய்களின் பரவல் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் அண்டை மாநிலமாம் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தினை பொறுத்தவரை எல்லை பகுதிகளில் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே நுழைய அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் இதுவரை 2 பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். தமிழக சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, புதுச்சேரி மாகேயில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!