மிஸ் பண்ணீடாதீங்க...இன்றும் நாளையும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்...!!!!

 
சான்றிதழ்கள்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி  மிகமிக கனமழை காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  குறிப்பாக பலர் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள், வீட்டுமனைப் பட்டாக்கள் என பல அரசு ஆவணங்களை இழந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு டிசம்பர்  9ம் தேதி அரசாணையை  வெளியிட்டுள்ளது.

ஆதார் ரேஷன்

அதில், ‘’தமிழகத்தில்  ''மிக்ஜாம்" புயல் காரணமாக சென்னை  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தன்னார்வலர்கள், பிரபலங்கள், தமிழக அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள்  போனற  அரசு ஆவணங்களை இழந்து தவித்து வருகின்றனர்.  

குறை தீர்க்கும் முகாம்

அவற்றை மீண்டும் பெறும் வகையில் அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதன் மூலம்  கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி   காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் இன்று டிசம்பர் 11  திங்கட்கிழமையும்,  சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை டிசம்பர் 12ம் தேதியும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடமும்  நேரம் குறித்த அறிவிப்புக்கள் அந்தந்த   மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். அத்துடன்  சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்காக  இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”  என குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web