இன்று திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் ரத்து!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. செப்டம்பர் 18ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் கோவில் இப்போதே பிரம்மோற்சவத்திற்கு தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு இன்றூ செப்டம்பர் 12 ம் தேதி செவ்வாய்கிழமை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால்  காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   செப்டம்பர் 17 ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால் திருமலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.  

திருப்பதி

இன்று காலை  செப்டம்பர் 12 ம் தேதி திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.   இந்நேரத்தில் பரிமளம் எனப்படும் வாசனை திரவியங்கள் கலந்த நீர் கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.  அதே நேரத்தில்  திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் தங்க தாமரை சேவையும் செப்டம்பர் 12 ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் செப்டம்பர் 12 ம் தேதி விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

செப்டம்பர் 18ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு  செப்டம்பர்  17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெறும். 18ம் தேதி ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க இருக்கிறார்.  இந்த நாட்களில்   மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக  மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  செப்டம்பர்  26ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.  இதனைமுன்னிட்டு  இனி வரும் நாட்களில் திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரம்மோற்சவ நாட்களில்  தங்க கருட சேவையை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான   அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்  செய்து வருகிறது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web