இன்று ரெங்கநாத பெருமாள் திருத்தேர்... திருநாங்கூரில் பிரம்மோற்சவம்!

 
திருநாங்கூர்

இன்று ரெங்கநாத பெருமாள் திருத்தேரை  முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சீர்காழியில் குவிந்து வருகின்றனர். மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 6ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

சீர்காழி அருகே திருநாங்கூரில் செங்கமல வள்ளி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாசுரனை வதம் செய்து பூமியை மீட்டபின், இந்த ஊரில் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாளாக காட்சியளித்ததாக தல புராணம் கூறுகிறது.

திருநாங்கூர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு இணையாக இந்த ரங்கநாதர் கருதப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இப்பெருமாளை பற்றி பாசுரங்கள் பாடி உள்ளனர்.

இக்கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் பெருமாள் முன்னிலையில் வேத ராஜன் பட்டாச்சாரியார் கருட கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

திருநாங்கூர்

இதனைத் தொடர்ந்து சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடந்தது. தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று திருத்தேர் பவனியும், 8-ம் தேதி மாலை திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?