இன்று வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம் ... தவெக உட்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

 
ஸ்டாலின்
 

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை தி.நகரிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நவம்பர் 4 முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இதற்கான தயாரிப்புகளைப் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

மொத்தம் 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 20 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இதனால் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அரசியல் சூடு அதிகரித்தது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், கமல்ஹாசன், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அவசரமாக மேற்கொள்ளக் கூடாது, போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும், தேர்தலை முன்னிட்டு இப்பணியைத் தொடங்குவது சரியான நடைமுறை அல்ல என திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கருத்து தெரிவித்தன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!