அதிரடி சரவெடி.... இன்று இந்தியா பாகிஸ்தான் மோதல்!!

 
இந்தியா பாகிஸ்தான்

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளின்   அணிகள் விளையாடி வருகின்றன.தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 வது லீக் போட்டியில்  இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அதே போல் வங்கதேசத்தையும் வெற்றி கண்டுள்ளது. இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.  

இந்தியா பாகிஸ்தான்


இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.   4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோத உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கிடக்கின்றனர்.  இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோஹ்லிக்கு சச்சின் சாதனையை முறியடிக்க 102 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த போட்டியில் காயத்தின் காரணமாக விலகியிருந்த  ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் களம் காணுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான்


ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆல்-ரவுண்டர் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்திய அணிக்கு பலம். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான்  சிறப்பாக விளையாடி வருகின்றனர்.பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகியோர் மிரட்ட உள்ளனர்.  இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய தினம் போட்டி நடைபெற உள்ள பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 84 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மழை வராவிட்டால் அனைவருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி விருந்து தான்.  இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை இலங்கைக்கு எதிராக ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும், வெற்றி பெற்றுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web