குட் நியூஸ்... இந்த வழித்தடத்தில் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு ரத்து... !
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் 1 நேற்று முதல் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில் மதுரை, மதுரை-தூத்துக்குடி இடையே நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த வழித்தடம் தொழில்வழித்தடமாக முக்கியத்துவம் பெற்று விளங்கி வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் வெகுவாக சிரமப்பட்டு வந்தனர். 4 வழிச்சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதாகவும் , ஒவ்வொரு ஊர்களுக்கு செல்லும் சாலை சந்திப்புகளிலும் மின் விளக்குகள் கூட எரிவதில்லை என வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அந்த சாலை சீர் செய்யப்படாமல் உள்ளதால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படாமல் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சேதம் அடைந்த மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!