செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

 
டோல்கேட்

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது இந்தியாவில் மொத்தம் உள்ள 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

சுங்கசாவடி டோல்கேட்
அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு 2 பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
 இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி   திண்டுக்கல், திருச்சி, சேலம் , மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

சுங்கச்சாவடி
 அதன் அடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் ரூ85லிருந்து ரூ90 ஆகவும்,   இரு முறை சென்று வர  ரூ125லிருந்து ரூ135ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ 2,505லிருந்து  ரூ 2,740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டுனர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web