பகீர் சிசிடிவி ஃபுட்டேஜ்... கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி டோல்கேட் ஊழியர் பலி!!

 
ஜெயப்பிரகாஷ்

சென்னை மணலியில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர்  ஜெயபிரகாஷ். இவர், மஞ்சம்பாக்கத்தில் உள்ள சுங்கன்சாவடியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.  ஜெயபிரகாஷ் அங்கு வரும் கண்டெய்னர் லாரிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது மணலி புதுநகரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக மாற்று பாதையில் வந்துள்ளது.


 

இதைக் கண்ட ஜெயபிரகாஷ் கத்தி கூச்சலிட்டார். உடனே லாரி  ஓட்டுநர் லாரியை வேகமாக திருப்ப முயன்றார். ஆனாலும் லாரி கட்டுப்பாட்டை இழந்து  ஜெயபிரகாஷ் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றதால்   பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

ஆம்புலன்ஸ்

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நிற்காமல் சென்ற லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து ஓட்டுநரை கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.   இச்சம்பவத்திற்கு முன்னர் சாலையில் சென்ற ஒருவர் மீது மோதியதும் அம்பலமாகியுள்ளது. அவர்கள் துரத்தி வந்ததால் மாற்று பாதையில் செல்ல முயற்சித்த போது தான்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web