தக்காளி கிலோ 80 பைசா... விவசாயிகள் தரையில் கொட்டி போராட்டம்!!

 
தக்காளி

தக்காளியின் விலை கிலோ 80 பைசா என்னும் அளவுக்கு கீழிறிங்கியதில் கோபமடைந்த விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி சிவப்பு தங்கம், ஆப்பிள் என கூறும் வகையில் கிலோ ரூ300 வரை அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.  ஆனால் தற்போதையை நிலமையோ தலைகீழ் தான். பறித்த கூலி கூட மிஞ்சாமல் கிலோ 80 பைசாவுக்கு சரிந்துள்ளது.இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  

 

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
கர்நாடக மாநிலம் தென்னிந்தியாவின் தக்காளித் தேவையை பூர்த்தி செய்கிறது.  வட இந்தியாவின் தக்காளி தேவையை மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் லாத்தூர் மாவட்டங்களின் தக்காளி உற்பத்தி நிறைவு செய்து  வருகிறது. இந்த முறை தக்காளி விலை உச்சம் தொட்டபோது  தக்காளி விவசாயிகள் உடனடியாக சாகுபடியில் இறங்கினார்கள். அவசர நெருக்கடியை எதிர்கொள்ள, அரசும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தது. முதல் சுற்றில் தக்காளி விளைச்சல் செய்து அதனை விற்பனை செய்தவர்கள் லட்சங்களை குவித்தார்கள். அவர்களைக் பார்த்து அதிகளவில் தக்காளி விளைச்சலில் இறங்கியவர்கள் தற்போது ஏகமாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.  

தக்காளி


மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, தரகர்கள் என சகல தரப்புக்கும் தக்காளியின் விலை ஈடுகொடுத்தாக வேண்டியுள்ளது.    மகாராஷ்டிர மாநிலத்தில் தக்காளி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய்க்கும் கீழாக   80 பைசா என்ற நிலையை எட்டியதில் தக்காளி விவசாயிகள் கொதித்துள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை இன்னமும் இழுபறியில் இருந்து வருகிறது. மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில்   லாத்தூர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web