இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... உச்சம் தொட்ட தக்காளி!

 
தக்காளி

 இந்தியாவின் பல பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில்   பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு  விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துவிட்டது.  

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதன் காரணமாக விளைச்சல் குறைந்ததோடு காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை  ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு  சந்தைகளில் இருந்தும் விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால் தற்போது தக்காளி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.  இதனால் விலை அதிகரித்துள்ளது.  

தக்காளி இஞ்சி

நேற்றைய தினம் இருந்த விலையை விட ‌ இன்று தக்காளி விலை அதிகமாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதன்படி கிலோவுக்கு ரூ.35 வரை  அதிகரித்து இருப்பதாக இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி விலை ரூ80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!