வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி.... மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி!

 
தக்காளி

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காய்கறிகளின் விலை கோயம்பேடு மார்க்கெட்டின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகள், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தினசரி வரும் காய்கறிகள், பழங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் வரத்தை பொறுத்து இந்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  இன்று திடீரென  தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்பப்போ தங்கம் மாதிரி உசந்துக்கிட்டே போறீயே கண்ணு என அங்கலாய்க்கின்றனர்.  இதே போல கத்திரிக்காய் கேரட் விலையும் உச்சம் தொட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி நேற்று வரை மொத்த விலையில் தக்காளி விலை ரூ10 முதல் ரூ15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தக்காளி

இந்நிலையில்  இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை மொத்த விலைகள் மட்டுமே. இந்த காய்கறிகள் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளில் சில்லறைக்கு விற்பனை செய்யும் போது மேலும் அதிகமாகி விடுகிறது.  இதே போல் வாழைப்பூ ஒரு கிலோ 25  க்கும், பாகற்காய் ஒரு கிலோ ரூ35 க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25  க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35  க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ ரூ40க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ15 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தக்காளி இஞ்சி


கேரட் ஒரு கிலோ 70  க்கும், காலிபிளவர் ஒரு கிலோ ரூ15  க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40  க்கும், வெள்ளரிக்காய் ஒரு ரூ25  க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ40  க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதே போல் இஞ்சி ஒரு கிலோ ரூ100  க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ30  க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50  க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ15 க்கும், பூசணி ஒரு கிலோ ரூ25  க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ45 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web