நாளை வானில் ப்ளூ மூன்!! வானில் அதிசயம்!!

 
நீல நிலா

ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பௌர்ணமி தோன்றியது.  மீண்டும் நாளை ஆகஸ்ட் 30ம் தேதி பௌர்ணமி தினம் வர உள்ளது. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, ​​2 வது முழு நிலவு ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. சில வானியல் நிகழ்வுகள் காரணமாக இந்த ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுவதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த் ப்ளூ மூன் ஆகஸ்ட் 30 ம் தேதி, வழக்கத்தை விட சற்று பெரியதாவும் பிரகாசமாகவும் தோன்றும்.  2வது முழு நிலவை ஆகஸ்ட் 30ம் தேதி  நடைபெற உள்ள இந்த வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும்.

நீல நிலா

இந்த நாளில் சந்திரனின் அளவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வு  2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும்.  விண்வெளியில் நடக்கும் சில வானியல் நிகழ்வுகளால், அமாவாசை, பௌர்ணமி, சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் என பிரித்தறியப்படுகின்றன.   2018ல்   இதே போன்ற ப்ளூ மூன் நிகழ்வு வானில் தென்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா  2 முறை பௌர்ணமி நாட்கள் வந்திருப்பதால்  2  முறை இந்த அரிய நிகழ்வைக் காணலாம்.  நிலா பூமியை   29.53 நாட்களில்  ஒரு முறை முழுமையாகச் சுற்றிவருகிறது. ஒரு  வருடத்தின் 365 நாட்களில் சந்திரன் பூமியை 12.27 முறை சுற்றுகிறது.  வருடத்தில் 12 மாதங்களில் மாதம் ஒரு பௌர்ணமி என்றாலும்  மீதம் 11 நாட்கள் உள்ளன. 

பௌர்ணமி
ஒவ்வொரு ஆண்டும் இந்த கூடுதல் நாட்கள் சேர்ந்துவிடும். 2 ஆண்டுகளில் 22 , 3  ஆண்டுகளில் 33 என அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு 2 அல்லது 3 வருடங்களுக்கும் ப்ளூ மூன் உருவாகும். இந்த அடிப்படையில் தான்  சில மாதங்களில்  2  முறை பௌர்ணமி தோன்றுகிறது.   அந்த வகையில் நாளை  ஆகஸ்ட் 30ம் தேதி புதன்கிழமை தோன்றும் பௌர்ணமி நிலவு நீல நிலவாகக் காட்சி அளிக்கும். அப்போது நிலவு மிகப் பெரிய அளவிலும் மற்றும் மிகப் பிரகாசமான ஒளியுடனும் தோன்றும். ப்ளூ மூன் என்றால் நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியலாம்.  சூரியன் மறைந்த உடனேயே தெரியும் ப்ளூ மூனைப் பார்க்கலாம். நாளை இந்த ப்ளூ மூன்  ஆகஸ்ட் 30 இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாகத் தெரியலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு மீண்டும் 3  ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ல் தான் தோன்றும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web