நாளை மகா சிவராத்திரி... எப்படி வழிபட வேண்டும்... இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க!

 
சிவன் கடவுள் பிரதோஷம் சிவராத்திரி

அம்மனுக்கு நவராத்திரி... சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அதிலும் நாளை மகா சிவராத்திரி வழிபாடு அத்தனை சிறப்பு வாய்ந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் கேட்கும் வரங்கள் நிறைவேறும். 

இந்த சிவராத்திரி நாளில் எப்படி வழிபட வேண்டும்? குறிப்பாக என்னென்ன எல்லாம் தவறாக செய்ய கூடாது என்று பார்க்கலாம் வாங்க... 

சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனின் ஆறு கால அபிஷேகங்களையும் கண்குளிர பார்க்கலாம். சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்று விரதமிருந்து வழிபடலாம். வயதானவர்கள் சமைக்காத பொருட்களை மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். பால், பழம் போன்றவைகளை உட்கொள்ளலாம். சர்க்கரையையும், உப்பையும் தவிர்க்க வேண்டும். 

இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்து நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து வழிபடலாம். இரவு ஆறு கால பூஜைகளின் போது சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். தேவாரம், திருவாசகம் ஓதுவதும் சிறப்பு. 

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

சிவராத்திரியன்று சிவனுக்கு அபிஷேகத்திற்கு எந்த பொருள் வாங்கிக் கொடுத்தாலும், வில்வத்தால் அர்ச்சனை செய்ய மறந்துடாதீங்க. வில்வ அர்ச்சனை அத்தனை சிறப்பு வாய்ந்தது. சிவாய நம ஓம், சிவாய நம ஓம் எனும் மந்திரத்தை சொல்லி வழிபடலாம். 

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைத் தரும். அருகிலுள்ள சிவாலயங்களில்  இவற்றை அபிஷேகத்திற்காக வாங்கி தரலாம். 

மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை தரும். சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும்.

பிரதோஷம்

இதை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க... 

நாளை  மகா சிவராத்திரியன்று மட்டும் என நினைக்காமல் மாதம் மாதம் வருகின்ற சிவராத்திரியன்றும் கூட இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க. 

சிவராத்திரியன்று மாமிச உணவுகளை தவிர்த்திடுங்க. அதே போன்று இரவு முழுவதும் கண் விழிப்பதைக் கேளிக்கையாக மாற்றுவதற்காக மது அருந்துதல். நண்பர்களுடன் விடிய விடிய சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது, செல்போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது, அடுத்தடுத்து திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே கண் விழிப்பது போன்றவைகளால் ஒரு பலனும் கிடையாது. 

ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவே சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். 

சிவராத்திரியன்று இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும், விரதம் இருக்க வேண்டும் என்பதற்காக, பகலில் நன்றாக உணவு உண்பதும், உறங்குவதும் தவறு. நீங்கள் வழிபாடு செய்யாமல், ஆலயத்திற்கும் செல்லாமல் இருக்கும் போது, சிவாலயங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை இடையில் வாங்கி உண்ணக் கூடாது. 

மகா சிவராத்திரி அன்று இந்த தவறை  மட்டும் செய்யவே செய்யாதீங்க. அது அடுத்த ஏழு ஜென்மத்திற்கும் பாவத்தைச் சேர்க்கும். உணவையும், உறக்கத்தையும் விலக்கி வைத்து, சிவனை வழிபடும் ராத்திரி தான் சிவராத்திரி. அன்றைய இரவு சிவனுக்கு உரியது. நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தினம், அன்னதானம் செய்து அடுத்தவர்களின் புண்ணியத்தையும் அழிக்காதீங்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!