நாளை மகாளய அமாவாசை... என்ன செய்யலாம்? என்னென்ன எல்லாம் செய்ய கூடாது!?

 
அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

நாளை மகாளய அமாவாசை. மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் புரட்டாசி,  ஆடி,  தை அமாவாசை  தினங்கள் மிக முக்கியமானவை. ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில்  பூலோகம் வந்தடைவர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி  அருள் புரிவர். அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும். த்துதல் கூடுதல் சிறப்பு.

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!
அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்குகிறார்கள் என்பது ஐதீகம். அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். நாளை செப்டம்பர் 21ம் தேதி புரட்டாசி அமாவாசை திதி வருகின்றது. முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கு இந்த நாளை மறக்காதீங்க. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?