நாளை கோடி புண்ணியம் தரும் சோமாவதி அமாவாசை... வழிபாடு, பலன்கள்!
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையும் ஒவ்வொரு வகையான சிறப்புக்களை கொண்டுள்ளது. குறிப்பாக சில மாதங்களில் வரும் அமாவாசை, தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆவணி மாத அமாவாசை சிறப்புக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாளை செப்டம்பர் 2ம் தேதி திங்கட்கிழமை ஆவணி மாதம் அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. திங்கட்கிழமை வருவதால் சோமாவதி அமாவாசை என அழைக்கப்படுகிறது. சோமாவதி அமாவாசை திதி தொடக்க நேரம்: 2 செப்டம்பர் 2024, காலை 05:21 மணிக்கு, திங்கட்கிழமை திதி முடியும் நேரம் : 3 செப்டம்பர் 2024, காலை 07:24 மணிக்கு, செவ்வாய்க்கிழமை
பொதுவாக, அமாவாசை நாளில் சிவ வழிபாடும், பௌர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது சிறப்பு. அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும். இந்த ஆண்டு 2024 ஆவணி மாத அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானது.
ஆவணி அமாவாசை அதிகாலை 5 மணிக்கே தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ நண்பகலுக்குள் செய்து முடிப்பது உத்தமம். சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் இயன்ற அளவு தானம் செய்யலாம். அமாவாசை நாளில் செய்யப்படும் தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!