நாளை தை அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இதை செய்ய மறக்காதீங்க!

 
அமாவாசை

நாளைய தினம் தை அமாவாசை மிக முக்கியமான நாள். அதிலும், தை அமாவாசை வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் விசேஷம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் புரட்டாசி, ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் மிக முக்கியமானவை என விரதம் இருக்கிறோம். அதே போல், மாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியும் முக்கியமானது. ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு நம்மைப் பார்க்க கிளம்பி வருவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகிறார்கள். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள்.

பித்ருக்களுக்கு எவன் ஒருவன் தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறானோ அவனை மட்டுமல்லாமல், அவனது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும். அமாவாசையன்று எதையெல்லாம் செய்ய கூடாது? எதை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும். 

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!
தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்கி அதன் பின்னர் பிதுர்லோகம் திரும்பி செல்வதாக ஐதீகம். தை அமாவாசையன்று தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். இவற்றுடன்  தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த திதியை மறக்காதீங்க!

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 

From around the web