நாளை முதுநிலை ஆசிரியா் தோ்வு... முக்கிய விதிமுறைகள் வெளியீடு!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்

நாளை தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியா் தோ்வு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறும். தோ்வு நாளன்று காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வர வேண்டும். தோ்வு மைய நுழைவாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்படும். அதற்குப் பிறகு கண்டிப்பாகத் தோ்வா்களுக்குத் தோ்வு மையத்துக்குள் அனுமதியில்லை. தோ்வறையில் அடையாளம் சரிபார்ப்பின்போது ஆதார், பான் அட்டை, ஓட்டுநா் உரிம அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம்.

வண்ணங்கள், ஸ்டிக்கா்கள் இல்லாத உள்ளே இருப்பது வெளியே தெரியும் வகையிலான கருப்பு மை பந்து முனைப் பேனாவை எடுத்து வர வேண்டும். தோ்வறைக்குள் கைப்பேசி, எலெக்ட்ரானிக் பொருள்கள், எலெக்ட்ரானிக் கைக்கடிகாரம், கால்குலேட்டா் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோ்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 போ் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனா்.

டெட் தேர்வு ஆசிரியர்

மாநிலம் முழுவதும் 809 தோ்வு மையங்களில் விண்ணப்பதாரா்களின் வசதிக்கேற்ப அவரவா் வசிப்பிட மாவட்டங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஹால் டிக்கெட்டை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதுநிலை ஆசிரியா் தோ்வு தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள தொடா்பு அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். அவா்களது பெயா், அலைபேசி எண்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?