நாளை நெறஞ்ச அமாவாசை... தவெக மாநாட்டுக்கு பூமி பூஜை... 'தளபதி' வர்றாரா?
நாளை மகாளய அமாவாசை. நெறஞ்ச அமாவாசை தினத்தையொட்டி இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்கான பூமி பூஜையை நாளை தவெக கட்சி நிர்வாகிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாளை மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்வில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி என்று அரசியல் களமும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதுநாள் வரை சினிமாவில் இருந்த விஜய், தற்போது நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளார். அத்தனை எளிதாக படத்தில் காட்டுகிற ஹீரோயிஸத்தை இதில் காட்ட முடியாது என்கிறார்கள் மூத்தவர்கள். அதற்கேற்ப மாநாடு அவர்கள் குறித்த தேதியில் நடத்தமுடியாமல் போனது.
இந்நிலயில், தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்ய துவங்கியுள்ளனர். மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே பொதுசெயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நாளை மகாளய அமாவாசை தினத்தில் நடைபெற இருக்கிறது. மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் நாளையே அவற்றை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்க இருக்கிறது.
பூமி பூஜை நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தாய், தந்தையுடன் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் நாளைய நிகழ்வுக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டு இருக்கிறது. எனினும், இதுவரை நடிகர் விஜய் பூமிபூஜை நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!