நாளை ‘ரிங் ஆஃப் ஃபயர்’ ... இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!

 
ரிங் ஆஃப் ஃபயர்
நாளை அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நாளை தினம் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்  நிகழ உள்ளது. 

வானில் நெருப்பு வளையமாக தென்படும் நாளைய சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் . லக்சர் சாய் கோவிலின் பூசாரி பண்டிட் அவ்னிஷ் ஷர்மாவின் கூற்றுப்படி, இந்த கிரகணம் இந்திய நேரப்படி நாளை இரவு 9:13 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மாலை 03:17 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிங் ஆஃப் ஃபயர்

சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் போது சூரியனை முழுமையாக மறைத்து விடும். ஆனால், சந்திரன் தொலைவில் இருக்கும் போது சூரியனின் நடுப்பகுதியை மட்டுமே மறைத்து நெருப்பு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வு ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிஜி, சிலி மற்றும் பிற பகுதிகளில் நேரடியாக  காணலாம். இந்தியாவை பொறுத்தவரை  இந்த சூரிய கிரகணத்தை பார்க்கவும் முடியாது, தென்படவும்  செய்யாது என்கின்றனர்.

ரிங் ஆஃப் ஃபயர்

ஜோதிடர் பண்டிட் சந்தீப் பராசரின் கூற்றுப்படி, சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பிருந்து அது முடியும் வரையிலான காலம் சூதக் காலம் என அழைக்கப்படுவதால் இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் தடை செய்யப்படும்.  இந்தியாவில் கிரகணம் தெரியாததால், சூதக் காலமும் செல்லாது என்கின்றார்.இந்தியாவில் வசிக்கும் மக்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாக காண முடியாது. ஆனால் விஞ்ஞான தளங்களில் நேரலையில் பார்க்கலாம் என்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web