நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!!

 
ஆட்சி மாறினாலும் அவஸ்தை மாறுமா? கோயம்பேடு மெட்ரோ பெயர் மாற்றம் சர்ச்சை!

நாளை வார இறுதி நாள் வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை. தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பலரும் தென்  மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ பறக்கும் ரயில்

 இந்நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  
இதுகுறித்து  மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நாளை செப்டம்பர் 15ம் தேதி  நெரிசலை தவிர்ப்பதற்காக   இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

மேலும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் சிறப்பு சேவை நாளை செப்டம்பர் 15ம் தேதி மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web