நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! கொண்டாடுங்க மாணவர்களே!!

கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில் நாளை ஆகஸ்ட் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை 10 நாட்கள் கேரளாவில் வெகுவிமரிசையான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கேரள தேசத்தில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகில் வந்து தன் மக்களை பார்க்க வருவதாக ஐதீகம். எனவே மகாபலி மன்னனை வரவேற்பதற்காக அத்தப்பூ கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி என எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை ஒட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மொழி பேசுபவர்கள் ஒன்றாக வசித்து வரும் சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்களும் வசிக்கின்றனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!