நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.. .!

 
விடுமுறை

தமிழகத்தில் தலைநகர் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் வேலை நாளாக செயல்படும் என பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த வாரம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டன. நாளை பிப்ரவரி 3ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவரை  முதன்மை கல்வி அலுவலர்  பிறப்பித்துள்ளார்.  நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை சென்னையில்  கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு  நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர்  தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web