நாளை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்வதாக, திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிக அளித்ததை நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

இது குறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் “திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுக்கவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நாளை செப்டம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1000 பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் நிலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேசும்போதெல்லாம் கூறி விளக்கினோம். அவர் முதல்வரிடம் கலந்து பேசி நிறைவேற்றித் தருவோம் எனக் கூறியிருந்தார். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிலும் அங்கம் வகித்தாலும் தற்போதைய கோரிக்கைக்காக தனியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
