பெற்றோர்களே உஷார்... அதிகம் மொபைல் பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிக்கும்... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

 
மொபைல் மூளை

காலை மொபைலில் அலாரம் அடித்து எழுவது முதல் மொபைல் காண்டாக்ட் பட்டியலில் உள்ள அனவைருக்கும் குட்நைட் சொல்வது வரை மொபைல் தான். 6 மாத கைக்குழந்தை தொடங்கி முதியவர்கள் வரை கைகளில் ஆறாம் விரலாய் மொபைலை தான் தான் வைத்துள்ளனர். இதனால்  அருகில் இருப்பவர்களிடம் பேசும் தேவை குறைந்து விடுகிறது. எங்கோ, யாருடனோ  எப்போதும் சாட்டிங், ஷேரிங் செய்து கொண்டே இருக்கிறது. இரவு கண்களை தூக்கம் தழுவும் வரை இது நீள்கிறது. இதனால் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.   சிலர், ஏதேனும் சீரிஸ் பார்ப்பது, படங்கள் பார்ப்பது போன்ற பழக்கங்களை வைத்திருப்பர்.

மொபைல் மூளை

தொடர்ச்சியான  இந்த பழக்கம் நமது மூளையை பாதிக்குமா இல்லையா என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கு இருந்து வருகிறது.  இன்னும்  ஒரு சிலர்  தொலைக்காட்சி, மொபைலின் சத்தம்  கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் உடையவர்களாக மாறிப் போயுள்ளனர்.  மாணவர்கள் அதிகமாக மொபைல் உபயோகிப்பதால் அவர்களின் படிப்பு மட்டுமல்ல  அறிவாற்றல் குறையவும் அதிக  வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.  அதே போல்   மொபைலை அதிகம் உபயோகிக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகவும் மெதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. சிறுவயதிலேயே மொபைலை உபயோகிப்பவர்கள், சமூகத்துடன் ஒட்டுதல் ஏற்பட நாளாகும்  என கூறப்படுகிறது. 

மொபைல்
  அதிக ஸ்க்ரீட் டைமால்  மூளை ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்கிறது.  மூளை, இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  அதிக போன் உபயோகத்தால்  அடிக்கடி  Mood Swings மாறிவிடுகிறது  அதிகமாக மொபைல் பயன்பாட்டாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.  அதிகம் மொபைல் உபயோகிக்கும் குழந்தைகள் முரட்டுத்தனமாக வளர்வதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  அதே போல் இளைய தலைமுறையில் பலர்   இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மொபைல் தான். தேவைக்கு மட்டும் உபயோகித்து படிப்படியாக அதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web