கசங்கி கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரிய வாய்ப்பு... ரிசர்வ் வங்கி அதிரடி...!!

 
கிழிந்த ரூபாய் நோட்டு

இந்தியாவில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை புதுப்பிக்க ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்   மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், ரிசர்வ் வங்கி மூலம் இந்தியாவில் பணநிர்வாகம் நடைபெற்று வருகிறது.   வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தும்  பரிசோதிக்கப்படும். அதன் நிலமைகளை பொறுத்து  மீண்டும் வங்கிகள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தால், அவை அனைத்தும்  அழிக்கப்பட்டு விடும்.

கிழிந்த ரூபாய் நோட்டு


  ரூபாய் தாள்கள் மடங்கியும், வரிசை எண்கள் மங்கியும்,  சேதமடைந்தும் இருந்தால் அவைகளை மாற்றிக் கொள்ள முடியும். அதே போல் ரூபாய்த்தாள் இரண்டு துண்டுகளாகி, வரிசை எண் இரண்டிலும் சரியாக இருந்தால் அதை சேதமடைந்த பணமாக ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்ளும். ரூபாய் நோட்டுக்கள் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக   கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகளை அருகில் உள்ள  எந்த வங்கியிலும் வேண்டுமானாலும் கொடுத்து புதுப்பித்துக் கொள்ளலாம்.   எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்ட பணத்தை எந்த வங்கி கிளையிலும் மாற்றமுடியாது. இந்த பணத்தினை தூக்கி எரிய மனமில்லாமல்  வைத்திருப்பர்  ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம்.  

கிழிந்த ரூபாய் நோட்டு


அழுக்கடைந்த பணத்தை ஒரு தனிப்பட்ட நபர், ஒரு நாளில் 20 நோட்டுகளை ரூ.5000 வரை மதிப்பு கொண்டதாக இருந்தால் அருகில் இருக்கும் கிளையிலேயே எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.  ரூபாய் நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்தாலோ அவை  கிழிந்த நோட்டாக கொள்ளப்படுகிறது.   ரூ.500 நோட்டு சுக்கு சுக்கலாக கிழிந்து இருந்தால் அதன்  அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகையும், 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web