2026 தேர்தல் திமுக–த.வெ.க இடையே கடும் போட்டி: டிடிவி தினகரன்!

 
டிடிவி விஜய்
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே கடுமையான போட்டி உருவாகும் என கூறினார். திமுகக்கு எதிராக த.வெ.க போராடி வருகிறது என்றும், அதிமுக தற்போது த.வெ.க இருக்க வேண்டிய இடத்தில் தானே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அதிமுக தலைவர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டமானது என்றும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என்றும் தினகரன் விமர்சித்தார். பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவிழந்துள்ளதாகவும், அவர் முதல்வர் வேட்பாளராக இருந்தால் கூட்டணி வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். பழனிச்சாமியின் செயல்பாடுகள் திமுகக்கு பலம் சேர்த்துள்ளன என்றும் தினகரன் தெரிவித்தார்.

அமமுக திமுக அளவுக்கு பெரிய கட்சி அல்லாதபோதிலும், பழனிச்சாமியை வீழ்த்த வல்லமை கொண்டது என தினகரன் வலியுறுத்தினார். கூட்டணி குறித்து சில கட்சிகள் அணுகியுள்ளதாகவும், ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தலுக்குப் பிறகே நடத்தலாம் என்றும், தற்போதைய படிவங்களில் சில கேள்விகள் தெளிவாக இல்லையெனவும் தினகரன் தெரிவித்தார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!