தொடர் விடுமுறை... கொடைக்கானலில் 3வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி!
தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் கொடைக்கானலில் 3வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் சுற்றுலா பயணிகள் திரும்பும் திசைகளில் எல்லாம் நீண்ட வாகன நெரிசலால் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறைகள், பண்டிகைக் கால விடுமுறை தினங்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.
அந்த வகையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதன் காரணமாக கொடைக்கானலின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், கார்களிலும், வேன்களிலும் வந்த சுற்றுலா பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் 3வது நாளாக இன்றும் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. பிரதான சாலைகளில் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
