நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!! வாகன ஓட்டிகளே உஷார்!!

 
போக்குவரத்து தடை

சென்னையில் எல்லா நேரமும் போக்குவரத்து நெரிசல் தான். வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். வார நாட்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி,கல்லூரி செல்வோர் , வியாபாரிகள், பொதுமக்கள் என எந்நேரமும் வாகனங்கள் விரைந்து கொண்டே இருக்கும். பீக் அவர்களில் வாகனங்கள்  எறும்புகளை போல் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காணலாம்.   சாதரண நாட்களிலேயே இது தான் நிலை என்ற போதில் தற்போதுசென்னை நகரின் பல்வேறு பகுதிகளில்  மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நாளை  செப்டம்பர் 3ம் தேதி   குறிப்பிட்ட சில பகுதிகளில்  ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.  

போக்குவரத்து மாற்றம்
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்   " நாளை செப்டம்பர் 3ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 05.00 மணி முதல் 07.30 மணி வரை 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ ஓட்டம் ஆல்காட் நினைவுப் பள்ளியில் தொடங்கி எம்.ஆர்.சி நகர் வரை சென்று மீண்டும் ஆல்காட் நினைவுப் பள்ளி வரை  நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  அதன்படி அடையார் எல்.பி சாலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கறை நோக்கி 3வது அவன்யு & 2வது அவன்யு அனைத்து உள்வரும் வாகனங்களும் ML முத்துலட்சுமி பார்க்கில் திருப்பி விடப்பட்டு, எல்.பி சாலை சாஸ்த்ரி நகர் 1வது பிரதான சாலை வழியாக கடற்கரை நோக்கி அனுப்பி வைக்கப்படும்.சாஸ்திரி நகர் பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர். முத்துலட்சுமி பார்க் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) 7வது அவன்யூ சந்திப்பு- எம்ஜி சாலை- எல்பி சாலை வழியாக  இலக்கை அடையலாம்.

போக்குவரத்து மாற்றம்
மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனகள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புறம் இரண்டாவது பிரதான சாலை. சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக  இலக்கை அடையலாம்.கிரீன்வேஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஆர்.கே.பிராடீஸ் கோட்டை வழியாக டிஜிஎஸ் தினகரன் இசைக் கல்லூரி மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web