நாளை முதல் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்... வாகன ஓட்டிகளே உஷார்... !!

 
ஓஎம் ஆர்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் தான். அதிலும் பீக் அவர்களில் கேட்கவேவேண்டாம். போதாக்குறைக்கு மெட்ரோ கட்டுமானம் மழையால் ஏற்பட்ட பள்ளங்கள் என போய்ச்சேரும் இடத்தை அடையவே முன்னதாக திட்டமிடுவது நல்லது. நாளை முதல்  OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக  சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.  

போக்குவரத்து தடை

அதன்படி 
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.  
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மாலுக்கு   இடதுபுறம் ராஜீவ் காந்தி சாலையில்  திருப்பிவிடப்படும். பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

போக்குவரத்து மாற்றம்


இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பிவிடப்படும்.  பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "U" திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web