நாளையும், மறுநாளும் போக்குவரத்து மாற்றம்... வாகன ஓட்டிகளே இந்தப்பக்கம் போகாதீங்க...!

 
போக்குவரத்து தடை

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து

அதில்  கேலோ இந்தியா  விளையாட்டு போட்டிகள் 2024 தமிழகத்தில்  சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி   நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை  ஜனவரி 27ம் தேதி மற்றும் ஜனவரி 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற   இருக்கிறது.

போக்குவரத்து மாற்றம்

எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக வாகன ஓட்டிகள்  தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம்  வழியாக பயன்படுத்தி கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web