இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

 
போக்குவரத்து

சென்னையின் முக்கிய பகுதிகளில்  இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்  என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று செப்டம்பர் 15ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.இதனையொட்டி   இன்று காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.    காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.


வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
பிற்பகல்  3 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. 
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பால சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.  ஈ.வே.ரா.சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம் 

போக்குவரத்து மாற்றம்
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வே.ரா சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலையை  பயன்படுத்தலாம்.திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.  ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.  ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். 


ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.  பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் நாரயணா குரு சாலை வழியாக செல்லலாம் .ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும்  வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

போக்குவரத்து மாற்றம்


ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வழியாக செல்லும்  வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.  ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. அந்த வழியாக செல்லும்  வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி  காலனி வழியாக  அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web