வாகன ஓட்டிகளே இந்த பக்கம் போகாதீங்க... திடீர் போக்குவரத்து மாற்றம்...!

 
போக்குவரத்து

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்  எம்சி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இது குறித்து  சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ சென்னை மாநகராட்சி பாதசாரிகள் வசதிக்காக வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை சந்திப்பில் இருந்து ஜி.ஏ. சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் நடைபாதை அமைக்கும் பணிகள் இன்று ஜனவரி 7ம் தேதி புதன் கிழமைதொடங்க உள்ளது.  

போக்குவரத்து தடை
இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  அதன்படி ஸ்டான்லி சுரங்கப்பாதையில் இருந்து எம்.சி. சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம்
கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் ஜி.ஏ. சாலையிலிருந்து எம்.சி. சாலையினை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து மாற்றத்திற்கு   வாகன ஓட்டிகள்   ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என  போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web