வாகன ஓட்டிகளே இந்த பக்கம் போகாதீங்க.... முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து மாற்றம்

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்ல்லிங் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  GCTP- CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 CMRL நிலையங்களில் கட்டுமான பணிக்காக   அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம்,   நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும்   ஸ்டெர்ல்லிங்   சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில்  11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு  போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து


சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும்.  ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம் .
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில்   திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம் .

போக்குவரத்து தடை


வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை  மூலம்  திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு  மூலம் அண்ணா மேம்பாலம்  ஜெமினி மேம்பாலம் வரை செல்லலாம் உட்புற சாலைகள் அனைத்தும்  ஒருவழிபாதை போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web