வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க... இன்று முதல் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து தடை

சென்னையின் பல பகுதிகளில்  மெட்ரோ ரயில் பணிகள்  நடைபெற்று வருகின்றன. அந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து இப்பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.  

போக்குவரத்து
ராயப்பேட்டை பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web