கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து போலீஸ்காரர் மரணம்!
சென்னை அருகே கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(50). மாதவரம் போக்குவரத்து போலீசில் காவலராக வேலைப் பார்த்து வந்த ரவிக்குமார், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டை ஏரியில் இருந்து மாதவரம் நோக்கி 200 அடி சாலையில் ரவிக்குமார் சென்றுக் கொண்டிருந்த போது, செங்குன்றத்தில் இருந்து துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிக்குமாரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவரான பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் ஷா(51) என்பவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
