சொந்த ஊருக்கு போறீங்களா..? ஜிஎஸ்டி சாலை வேண்டாம்... இந்த ரூட்ல வாகன நெரிசல் கிடையாது!
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்படும் மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி (GST) சாலையில் கடும் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அந்த சாலையை தவிர்த்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) வழியாகப் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களில் தாம்பரம் – கிளாம்பாக்கம் வழியாக விழுப்புரம் வரை செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் எளிதாகப் பயணிக்கச் செய்வதே என காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆவடி மற்றும் மதுரவாயல் வழியாக வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக மாற்றித் திருப்பப்படுகின்றன. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக வண்டலூர் நோக்கிச் செல்லும் வாகனங்களும் இதே மாற்றுப்பாதையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சொந்த வாகனங்களில் புறப்படும் பொதுமக்கள், ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் வழியைப் பயன்படுத்தினால் நெரிசலைத் தவிர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
