பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் சோகம்... ஆட்டோ மோதி வியாபாரி பரிதாப மரணம்!

 
விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பைக்கில் இருந்து தவறி விழுந்த வியாபாரி மீது ஆட்டோ மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி மகன் கனகராஜ் (56). காய்கறி வியாபாரி. இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் ஊரில் இருந்து நேற்று முன்தினம் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள சர்ச் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே சாலையில் விழுந்துள்ளார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கனகராஜ் மற்றும் ஆட்டோவில் பயணம் ெசய்த புதுக்கிராமம் வசந்தா நகர் 2-வது தெருவை சேர்ந்த ராதா (30) என்பவரும் பலத்த காயம் அடைந்தனர். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

ஆட்டோ டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் காயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கனகராஜ் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவரான கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முனியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web