திருமண விழாவில் சோகம்... கார் விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் மரணம்... 4 பேர் படுகாயம்!
திருமண விழாவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக, கல்லூரி நண்பரின் சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விட்டு, கோவையில் இருந்து கரூருக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தபொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் நேற்று காரில் கரூர் நோக்கி பயணித்தனர்.

அவர்கள் வந்த கார், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலையை அடுத்த காட்டுமுன்னூர் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியதில் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிய நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த பிரவீண் (19) மற்றும் வளையப்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே நேரத்தில், ஹரிபிரசாத், ஹரிஹரன், ஹசன், திவாகரன் ஆகிய நால்வர் காயமடைந்தனர். மேலும், இருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
